» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்!
வியாழன் 5, டிசம்பர் 2024 4:51:18 PM (IST)

சூரியனை ஆய்வு செய்வதற்கான பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி இருந்தது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று (புதன்கிழமை) மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
செயற்கைகோளில் ஏற்பட்ட கோளாறை செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அது சரிசெய்யப்பட்டு இன்று மாலை ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்வதற்கான பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தற்போது விண்ணில் நிலை நிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
