» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது : காங்கிரஸ் கருத்து!
சனி 22, மார்ச் 2025 5:50:46 PM (IST)
குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், தொகுதி மறுசீரமைப்பு செய்ய முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?தொகுதி மறுசீரமைப்பு அவசியமென்றாலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையக்கூடாது.மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதிகளை இழப்பதை ஏற்க முடியாது. குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்தியஸ்தம்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
வியாழன் 1, ஜனவரி 2026 11:24:39 AM (IST)

அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
புதன் 31, டிசம்பர் 2025 8:43:39 PM (IST)

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
புதன் 31, டிசம்பர் 2025 12:11:35 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)


