» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விருப்பமா? 10 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்!
திங்கள் 24, மார்ச் 2025 5:43:37 PM (IST)
செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை இன்னும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யக்கோரி முறையாக நோட்டீஸ் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் அவகாசம் தேவை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததது.
இந்த வழக்கு பல நாட்களாக நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும். அவகாசம் கேட்பது நியாயமற்ற முறையாக இருந்தாலும் கூட, இன்னும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
போக்குவரத்துத்துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 12-ந்தேதி நடந்த விசாரணையின்போது, அமைச்சராக தொடர விருப்பமா? என செந்தில் பாலாஜியிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 10:24:37 AM (IST)

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:25:39 PM (IST)

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சண்டை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:26:16 AM (IST)

பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவோம்: பிரதமர் மோடி ஆவேசம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:27:44 PM (IST)

பஹல்காம் தாக்குதல் : உளவுத்துறை தோல்விகள் குறித்து ஆய்வு நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:33:36 PM (IST)

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்?
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:42:42 PM (IST)
