» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!

வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசை வென்றுள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். 

கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளில் ஏராளமானோர் வேலை செய்து வருகிறார். இதன் மூலம் கேரளாவுக்கு அதிகப்படியான அந்நிய செலாவணி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி அபுதாபி லாட்டரி மூலம் கேரள தொழிலாளர்கள் பலர் கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர். அந்த வகையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். 

இதுகுறித்த விவரம் வருமாறு: திருவனந்தபுரம் சிறையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் அலியார் குஞ்சு (வயது 61). இவருக்கு மனைவியும் 3 மகள்களும் உண்டு. இதில் 2 மகள்களுக்கு திருமணமானது. அலியார் குஞ்சு கடந்த 40 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது அபுதாபி பிக் லாட்டரி எடுப்பது வழக்கம்.

அதன்படி கடந்த 18-ந் தேதி ஆன்லைன் மூலம் லாட்டரி டிக்கெட்டை எடுத்தார். அவர் எடுத்த லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூ.57 கோடி கிடைத்தது. இதை அறிந்த அலியார் குஞ்சும் அவரது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து அலியார் குஞ்சு கூறுகையில், 'நான் 40 ஆண்டுகள் சவுதியில் பணியாற்றி விட்டேன். இனி சொந்த ஊரில் சொந்தமாக தொழில் செய்யலாம் என உள்ளேன்' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory