» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டிரம்பின் அழுத்தத்தினாலேயே பொம்மைகளுக்கு கூட வரி குறைப்பு : ப. சிதம்பரம்
வெள்ளி 28, மார்ச் 2025 11:41:27 AM (IST)
டிரம்பின் அழுத்தத்தினாலேயே பொம்மைகளுக்கு கூட சுங்க வரியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்து அறிவித்திருக்கிறார் என ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

வரிவிதிப்பு மற்றும் வர்த்தக போரால், ஏற்றுமதியில் பாதிப்பு, குறைந்த அந்திய நேரடி முதலீடு, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் கரன்சி மதிப்பு குறைவு ஆகியவை ஏற்பட வழிவகுக்கும். கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் கூட்டாக சேர்ந்து இதனை தடுக்கும் பணியில் இந்தியா ஈடுபட வேண்டும் என்றார். வரிவிதிப்பு போரால் வர்த்தக போர் ஏற்படும். இதனால், மொத்த உலகமும் துன்பத்திற்கு உள்ளாகும் என்றும் கூறினார்.
2025-26 மத்திய பட்ஜெட்டில், டிரம்பின் அழுத்தத்தினாலேயே மோட்டார் வாகனங்கள், பயணிகளுக்கான கார்கள், சரக்குகள், போக்குவரத்து வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் பொம்மைகளுக்கு கூட சுங்க வரியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்து அறிவித்திருக்கிறார். இதனால், உலக பொருளாதாரம் பாதிக்கப்படும். வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களை அது அழித்து விடும் என்று கூறினார்.
எனினும், இதற்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க. உறுப்பினரான குன்வர் ரத்தன்ஜீத் பிரதாப் நாராயண் சிங் பேசும்போது, வரிவதிப்பு அமலாகாத வரை, என்ன பேசுவது? அல்லது அதுபற்றி யார் என்ன குறிப்பிடுவது? என கேட்டார். ஏப்ரல் 2-ந்தேதி அமல்படுத்தப்பட்ட பின்னரே, அதுபற்றி நாம் பேச முடியும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)

ஆனந்த்Mar 28, 2025 - 02:06:41 PM | Posted IP 162.1*****