» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன்: ‍ கர்நாடக அமைச்சர் ஆவேசம்!

சனி 3, மே 2025 5:40:21 PM (IST)

பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதல் குறித்து அமைச்சர் ஸமீர் அகமது கான் செய்தியாளர்களுடன் பேசுகையில், ”பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டால் அந்நாட்டுக்கு எதிராக சண்டையிடவும் தான் தயார் என்றும், தேவைப்பட்டால் உடலில் வெடிகுண்டுகளை அணிந்துகொண்டு அந்நாட்டில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, கடந்த 2018-ஆம் ஆண்டு காங்கிரஸில் ஐக்கியமானார் ஸமீர் அகமது கான். இந்தநிலையில், சாம்ராஜ்பேட் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் வீட்டுவசதி, வஃக்ப், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: ”நாம் இந்தியர்கள், ஹிந்துஸ்தானியர்கள்; அப்படியிருக்கையில், நமக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்புமில்லை. பாகிஸ்தான் நமக்கு எப்போதுமே எதிரிதான். நாட்டுக்கு தேவைப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் எனக்கு அனுமதியளித்தால், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தேவையான வெடிபொருள்களை தாருங்கள், அவற்றை அணிந்துகொண்டு பாகிஸ்தான் செல்ல தயார். நான் நகைப்புக்காக ஒன்றும் இப்படிப் பேசவில்லை. எனது உயிரை நாட்டுக்கா தியாகம் செய்யவும் தயார்” என்று கூறியிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory