» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!!

சனி 3, மே 2025 10:23:13 AM (IST)



கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

கோவா மாநிலம் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள லைராய் தேவி கோயிலில் புகழ்பெற்ற 'ஜாத்ரா' என்று கூறப்படும் திருவிழா நேற்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் நேற்று நள்ளிரவு பக்தர்கள் ஒரு சரிவான பாதையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவா மாவட்ட மருத்துவமனை மற்றும் கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இதுதொடர்பாக தன்னுடன் பேசியதாகவும் மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று கூறியதாகவும் முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில், ஷிர்காவ் கோவில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்தது கவலை அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory