» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு !
திங்கள் 7, ஏப்ரல் 2025 5:08:42 PM (IST)
நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி அறிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இன்று வரை வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.803க்கு விற்பனையாகி வந்த நிலையில், அது இந்த விலை உயர்வு காரணமாக ரூ.853 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாதாரண மானியம் பெறும் பயனாளிகளுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை பெறும் பயனாளிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, எரிவாயு சிலிண்டர் விலை மாதத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அண்மைக்காலமாக ஒவ்வொரு மாதமும் மாதத் தொடக்கத்தில் மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எரிவாயு உருளை விலை மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்வது வழக்கம். மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றையும் கணக்கிட்டு எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில்,
அந்த வகையில், ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலைகள் மாற்றியமைக்கப்பட்டன. அப்போது, உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இதனால், சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,921.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்போது, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு வாரத்துக்குப் பின் தற்போது மீண்டும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை நகருக்கு நகரம் மாறுபடும் என்பதால், இந்த விலை உயர்வால், டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.853 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல சென்னையில் இதுவரை ரூ.818க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் இனி ரூ.868க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் இனி 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரூ.879 ரூபாய்க்கு விற்பனையாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)
