» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி அமல் : பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம்!

வியாழன் 17, ஏப்ரல் 2025 4:00:08 PM (IST)

மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக்கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக பள்ளி படிப்பில் இந்தி மொழி கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.

இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும். இந்த புதிய கொள்கை வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் SCERT, (எஸ்.சி.இ.ஆர்.டி) பால்பாரதி அமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும்.மேலும், புதிய கல்வி கொள்கையின்படி, அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

பழைய பாடதிட்டத்தில் இருந்து புதிய பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மதிப்பீடு செய்ய Holistic Progress Card' (HPC) ஹெச்பிசி அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory