» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்!

சனி 19, ஏப்ரல் 2025 11:53:39 AM (IST)


டெல்லியில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் 4பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. இதில் மீட்கப்பட்டவர்கள் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். "இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 14 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மருத்துவர்கள் அதை உறுதி செய்துள்ளனர். 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கருதுகிறோம். இடிந்து விழுந்த கட்டிடம் நான்கு மாடி கட்டிடம்” என டெல்லி வடகிழக்கு மாவட்ட காவல் துறை துணை ஆணையர் சந்தீப் லம்பா தெரிவித்தார்.

"எங்களுக்கு அதிகாலை 3 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் இங்கு விரைந்து வந்தோம். இந்த நான்கு மாடி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் மக்கள் சிக்கி உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என தீயணைப்பு துறை அதிகாரி ராஜேந்திர அத்வால் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று மாலை நகரின் சில பகுதிகளில் மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory