» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏழை, நலிவுற்ற மக்களுக்காக சேவையாற்றியவர் போப் பிரான்சிஸ்! - பிரதமர் மோடி இரங்கல்

திங்கள் 21, ஏப்ரல் 2025 5:30:13 PM (IST)



ஏழை மற்றும் நலிவுற்ற மக்களுக்காக சேவையாற்றியவர் போப் பிரான்சிஸ் என்று அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 88. இந்த துயரச் செய்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், போப் பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனையுற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: துயரமான இத்தருணத்தில் உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க சமூகத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரக்கம், எளிமை, துணிவுடன் ஆன்மிக பாதையில் சென்ற விதம் ஆகிய குணநலன்களின் அடையாளமாக கலங்கரை விளக்கமாக உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான மக்களால் போப் பிரான்சிஸ் என்றென்றும் நினைவில் வைத்து போற்றப்படுவார். அவர் ஏழை மற்றும் நலிவுற்ற மக்களுக்காக சேவையாற்றியவர். இன்னல்களால் துயருற்றவர்களுக்கு நம்பிக்கை ஒளியை ஏற்றிய பெருமகனார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory