» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்?
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:42:42 PM (IST)

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை ஊழியர் ஒருவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக் கொண்டு சென்றார். 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கொண்டாட இந்த கேக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பாகிஸ்தான் தூதரக ஊழியர் மவுனம் சாதித்தார். சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் வேதனை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கேக்குடன் கொண்டாடுவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் தூதரக அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை போலீசார் வாபஸ் பெற்றனர். தூதரகம் அருகே இருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினார்கள். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் தூதரகம் அருகே இன்று பா.ஜ.க.வினர் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)


