» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
திங்கள் 28, ஏப்ரல் 2025 11:28:08 AM (IST)
கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர். காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றி கொடுரமாக கொன்றதுடன். சடலங்களை எரித்துள்ளனர். சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து இவ்வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ தீவிர விசாரணை நடத்தி 15 பேரை குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். 2 பேர் விடுவிக்கப்பட்டனர். கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 10 பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தை பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)
