» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:23:10 PM (IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றதால், சாட்சியம் அளிக்க எவரும் வரவில்லை என புகார் எழுந்தது. அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறையும், மோசடியில் பாதிக்கப்பட்டோரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என்பதை 28ம் தேதிக்குள் முடிவு எடுத்து தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். தனக்கு ஜாமீன் தான் முக்கியம் என்று கருதிய செந்தில்பாலாஜி நேற்றிரவு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ், அபய் ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ''அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில்பாலாஜி அமைச்சராக கூடாது.
டில்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பு ஏற்க கூடாது '' என்று வாதிட்டனர்.
இதற்கு, 'மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை' என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. பின்னர் நீதிபதிகள், ''மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்றால், ஜாமீனை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்யலாம்'' என தெரிவித்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தை பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)
