» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!

புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் அமைச்சரை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களைச் சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் தற்போது முதல் அமைச்சர் மாற்றம் பற்றிய பேச்சு அங்கு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால், கர்நாடகாவில் தற்போதைக்கு முதல் அமைச்சர் மாற்றம் குறித்து ஆலோசிக்கவில்லை என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 5 ஆண்டுகளும் நான் முழுமையாகப் பதவியில் இருப்பேன் என உறுதிபடக் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறை போல் உறுதியாக ஆட்சியில் இருக்கும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory