» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது: நிர்மலா சீதாராமன்

ஞாயிறு 5, அக்டோபர் 2025 9:48:31 AM (IST)

இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற கவுடில்யா பொருளா​தார மாநாட்​டில் மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: உலகளா​விய பிரச்​சினை​கள் எல்​லாம் தீவிரம் அடைந்து வரு​கின்​றன. வரி விதிப்​பு​கள், தடைகள், பிரிக்​கும் யுக்​தி​கள் எல்​லாம் உலகளா​விய நுகர்வு சங்​கி​லியை மாற்​றியமைக்​கின்​றன. இந்த மாற்​றங்​கள் இந்​தி​யா​வின் பலவீனம் மற்​றும் வலிமை ஆகிய இரண்​டை​யும் வெளிப்​படுத்​துகிறது. மாற்​றங்​கள் மற்​றும் அதிர்​வு​களை தாங்​கும் திறனை வரவேற்​கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல.

வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய நாம், மொத்த உள்​நாட்டு உற்​பத்​தியை 8 சதவீத​மாக உயர்த்த வேண்​டும். உள்​நாட்டு வர்த்தக நில​வரம் வலு​வாக உள்​ளது. இது உலகளா​விய வர்த்​தகத்​தில் ஏற்​பட்​டுள்ள நிச்​சயமற்​றதன்​மை​யால் ஏற்​படும் பாதிப்பை குறைக்​கும். இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் எதை​யும் தாங்​கும் திறன் படைத்​தது. அது தொடர்ந்து நிலை​யாக வளரும். உலகளா​விய வர்த்​தகத்​தில் தற்​போது ஏற்​பட்​டுள்ள சூழல், நிலை​யான மற்​றும் எதிர்​பா​ராத ஒத்​துழைப்​பு​களை ஏற்​படுத்த வழி​வகுக்​கும். நமது விதியை தீர்​மானிக்​கும் முடிவு​கள் உலகில் எங்கோ எடுக்​கப்​படும்போது நாம் வெறும் பார்​வை​யாளர்​களாக மட்டும் இருக்க முடி​யாது. அதில் நாம் தீவிர பங்​காற்றி மாற்​றங்​களை ஏற்​படுத்த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory