» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போலி மதுபானம் விற்பனை: தெலுங்கு தேசம் நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்!

திங்கள் 6, அக்டோபர் 2025 11:36:15 AM (IST)

போலி மதுபானம் விற்பனை செய்த விவகாரத்தில் தெலுங்கு தேசம்  நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்தார். 

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் முலக்கலச்செருவு பகுதியில் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த ஜனார்தன் ராவ், கோட்டராஜு, ராஜேஷ், ஸ்ரீனிவாச ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்த குற்ற செயல்களில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory