» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

தெரு நாய் விவகாரம் தொடபாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தெருநாய் கடிகளைத் தடுக்கவும், ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுப்பது 2 மாதத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இதனையடுத்து 2 மாதம் அவகாசம் வழங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் 3 ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தெரு நாய் விவகாரம் தொடபாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கபட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. நாய்கள் கருத்தடை திட்டத்திற்காக 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)

சிறுவர்களை சிறைபிடித்த வெப் சீரிஸ் இயக்குநர் சுட்டுக்கொலை: மும்பையில் பரபரப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:15:28 AM (IST)

இளைஞர்கள், மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை: கேரள முதல்வர் அறிவிப்பு
வியாழன் 30, அக்டோபர் 2025 5:49:22 PM (IST)




