» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
வியாழன் 18, டிசம்பர் 2025 3:51:31 PM (IST)
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே பெயர் வைப்பது ஏன்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "இது வளர்ச்சி பாரதம் இல்லை விபரீத பாரதம். இது விக்சித் பாரத் மசோதா அல்ல விரக்தி பாரத்” என விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, மத்திய அரசின் 125 நாள் வேலைக்கான ரோஜ்கர்-அஜிவீகா திட்ட மசோதா மீதான விவாதம் நடந்தது. இந்த தீர்மானம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-
இது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம். தொழிலாளர் விரோத அரசு. தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கிறோம். இது தொழிலாளர் விரோத அரசு. பழைய 100 நாள் வேலை திட்டத்தின் பெயரிலேயே வேலைக்கு உறுதி இருந்தது. ஆனால் நீங்கள் தற்போது தாக்கல் செய்துள்ள இந்த மசோதா அப்படி அல்ல. அதிகாரத்தை மத்திய அரசின் கையில் கொடுக்கக்கூடியதாக மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மசோதாவில் நிதி பங்கீட்டை 60-க்கு 40 என்ற விகிதாச்சாரத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மாநிலங்களாகிய நாங்கள் 61 சதவீதத்தை நாங்கள்தான் கொடுக்கிறோம். மத்திய அரசு 39 சதவீதம்தான் தருகிறது. பல திட்டங்களில் இப்படித்தான். பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 100 நாட்களுக்கு பதிலாக 125 நாள் வேலை உண்டு என்று சொல்கிறீர்கள். ஆனால் பழைய திட்டத்தில் நீங்கள் எந்த ஆண்டிலாவது 100 நாள் வேலையை முழுமையாக கொடுத்து இருக்கிறீர்களா?.
நீங்கள் (மத்திய அரசு) வைக்கிற திட்டங்கள் எல்லாவற்றின் பெயரும் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே இருக்கிறது. ஏதாவது ஒரு மசோதாவின் (திட்டம்) பெயர் கூட தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது மராத்தி பொன்ற வேறு பிராந்திய மொழிகளில் வைக்கப்படுவதில்லை ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றமில்லை: மத்திய பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 2:34:53 PM (IST)

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பு!
சனி 31, ஜனவரி 2026 5:32:04 PM (IST)

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது
சனி 31, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஐ.டி ரெய்டின் போது பயங்கரம்!
சனி 31, ஜனவரி 2026 11:44:42 AM (IST)

பள்ளிகளில் இலவச நாப்கின் கிடைக்க மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்: மீறினால் பள்ளி அங்கீகாரம் ரத்து!
சனி 31, ஜனவரி 2026 10:37:36 AM (IST)

பெண் கமாண்டோ படுகொலை : வரதட்சணை விவகாரத்தில் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 30, ஜனவரி 2026 4:56:57 PM (IST)

