» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் கமாண்டோ படுகொலை : வரதட்சணை விவகாரத்தில் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 30, ஜனவரி 2026 4:56:57 PM (IST)

டெல்லியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, பெண் கமாண்டோ போலீசை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் காஜல் சவுத்ரி. 27 வயதான இவர் டெல்லி ஸ்வாட் கமாண்டோ பிரிவில் பணியாற்றி வந்தார். அவருடைய கணவர் அங்கூர். இவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் க்ளார்க் பணியில் இருந்தார். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 22-ம் தேதி, அங்கூருக்கும் - காஜலுக்கு சண்டை வந்துள்ளது.

ஒருகட்டத்தில் கணவன் - மனைவிக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது அங்கூர், காஜலின் சகோதரரை தொலைபேசியில் அழைத்து, "நான் உன் அக்காவை அடித்துக் கொலை செய்யப் போகிறேன். இந்த தொலைபேசி அழைப்பை துண்டிக்காமல் நடப்பவற்றை நீ ரெக்கார்ட் செய்து கொள்ளலாம்,” என்று கூறிக் கொண்டே உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படும் டம்பிள்ஸை எடுத்து காஜலின் தலையில் அடித்துள்ளார்.
இதில் காஜல் படுகாயமடைந்துள்ளார். அவர் காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 5 நாட்கள் உயிருக்குப் போராட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து காஜலின் சகோதரர் நிகில் அளித்த புகாரின்படி அங்கூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கோரச் சம்பவத்தைப் பற்றி நிகில் கூறுகையில், "எனது அக்கா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அக்கா அலறித் துடிப்பதை என் போன் வாயிலாக நான் கேட்டபோது நடுங்கிப் போனேன்.அவரை வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தியுள்ளனர். அன்றைய தினம் என் அக்காவின் கணவர் காலையிலேயே போன் செய்து அக்காவைப் பற்றி கோபமாகப் பேசினார். நான் அவரை சமாதானப்படுத்திவிட்டு உடனடியாக என் அக்காவிடம் பேசினேன்.
அதுநாள் வரை அவருக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் மறைத்த அக்கா, அன்றைய தினம் அவளுடைய அத்தனைப் போராட்டங்களைப் பற்றியும் சொன்னார். அப்போது அதைக் கேட்ட அக்காவின் கணவர், அவரிடமிருந்து போனைப் பறித்துக் கொண்டார்.
தொடர்ந்து அவளை அடித்தார். என் அக்காவின் அலறல் சத்தம் எனக் கேட்டது. ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் என்னை அழைத்து, "உன் அக்கா இறந்துவிட்டார். மருத்துவமனைக்கு வா” என்று கூறினார். படித்து, போலீஸ் கமாண்டோ பதவியில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த வரதட்சணை கொடுமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
வெள்ளி 30, ஜனவரி 2026 10:30:01 AM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 29, ஜனவரி 2026 5:23:49 PM (IST)

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
வியாழன் 29, ஜனவரி 2026 12:46:13 PM (IST)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்ஸ் கைது!
வியாழன் 29, ஜனவரி 2026 8:24:37 AM (IST)

அஜித் பவார் விமான விபத்து குறித்து உரிய விசாரணை : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
புதன் 28, ஜனவரி 2026 4:08:44 PM (IST)

விமான விபத்து: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு!
புதன் 28, ஜனவரி 2026 10:24:59 AM (IST)