» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழர்களின் பொங்கல் பண்டிகை உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு

புதன் 14, ஜனவரி 2026 12:04:17 PM (IST)



தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவதையும் பிரதிபலிக்கும் பொங்கல் பண்டிகை இன்று ஒரு உலகளாவிய விழாவாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகிறார். "ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்தப் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, "இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கினார்.

மோடி பேசியதாவது: "தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவதையும் வெளிப்படுத்தும் சிறப்பான பண்டிகை பொங்கல். வேளாண்மையை போற்றும் பண்டிகைதான் பொங்கல். பொங்கல் பண்டிகையை சர்வதேச திருவிழாவாகக் கொண்டாடுவது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் மக்களுடன் பொங்கலைக் கொண்டாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

தமிழ் கலாசாரத்தில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என்று போற்றப்படுகிறார்கள். தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவதையும் பிரதிபலிக்கும் பண்டிகைதான் பொங்கல். பொங்கல் இன்று ஒரு உலகளாவிய விழாவாக மாறியுள்ளது. தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான தொடர்பை வெளிப்படுத்தும் திருக்குறள் இருந்துள்ளது” என்று அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory