» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சனி 21, மார்ச் 2026 4:12:29 PM (IST)
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியின் போது, உடன் வந்த பெண் எஸ்.பி.க்கு தனது காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், 2021-ஆம் ஆண்டு ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இந்தத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவர் முதலில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜேஷ் தாஸைக் கைது செய்யவும், அவர் சரணடையவும் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு: பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சனி 21, மார்ச் 2026 4:52:35 PM (IST)

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 12:30:14 PM (IST)

ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)

கேரளத்தில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது!
வெள்ளி 20, மார்ச் 2026 4:13:29 PM (IST)

சீனாவுக்கான இந்தியத் தூதராகத் தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 20, மார்ச் 2026 7:52:12 AM (IST)

மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
வியாழன் 19, மார்ச் 2026 4:57:50 PM (IST)

