» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு: பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சனி 21, மார்ச் 2026 4:52:35 PM (IST)

கேரள மாநிலம் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாஸை கத்தியால் குத்திக் கொலை செய்த பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு மே 10-ஆம் தேதி, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவர் வந்தனா தாஸ் (23) பணியில் இருந்தார். அப்போது சிகிச்சைக்கு வந்த வேலியம் செருக்காரக்கோணத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சந்தீப் (44), திடீரென வன்முறையில் ஈடுபட்டு அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கத்தியால் மருத்துவர் வந்தனாவை சரமாரியாகக் குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த வந்தனா தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தீப்பைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கொல்லம் கூடுதல் நீதிமன்ற நீதிபதி வினோத், கடந்த 17-ஆம் தேதி சந்தீப்பைக் குற்றவாளி என அறிவித்தார். இன்று அவருக்கான தண்டனை விவரங்களை வெளியிட்டார்.
கொலை வழக்கில்: ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம், கொலை முயற்சி (பிரிவு 307 & 326): தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை. மருத்துவமனை தாக்குதல்: 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை. இதர பிரிவுகள் (323, 324, 332, 333): மொத்தம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "பல்வேறு பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்த பின்னரே, ஆயுள் தண்டனை தொடங்கும்" எனத் தெரிவித்தார். இந்தக் குற்றத்தை 'அரிதானவற்றில் அரிதானது' எனக் கருதி, தண்டனையை மேலும் அதிகரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சனி 21, மார்ச் 2026 4:12:29 PM (IST)

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 12:30:14 PM (IST)

ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)

கேரளத்தில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது!
வெள்ளி 20, மார்ச் 2026 4:13:29 PM (IST)

சீனாவுக்கான இந்தியத் தூதராகத் தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 20, மார்ச் 2026 7:52:12 AM (IST)

மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
வியாழன் 19, மார்ச் 2026 4:57:50 PM (IST)

