» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:09:27 PM (IST)

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்கக் கோரியும், சனாதன தர்மம் குறித்து சர்ச்சை தரும் வகையில் பேசியதாகவும் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. "சனாதனத்தை கொசுவைப் போல ஒழிக்க வேண்டும்" என்ற உதயநிதியின் பேச்சு உள்ளிட்டவை நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், குற்றங்களை வரையறுப்பதும், புதிய சட்டங்களை உருவாக்குவதும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு உரிய விளக்கங்களை மட்டுமே நீதிமன்றங்கள் வழங்க முடியும். புதிய சட்டங்களை இயற்றும்படி அரசை நீதிமன்றம் வற்புறுத்த முடியாது.
சமூக மாற்றத்திற்கு ஏற்ப, வெறுப்புப் பேச்சுகளைத் (Hate Speech) தடுக்கத் தேவையான புதிய சட்டப்பிரிவுகளை மத்திய அரசு கொண்டு வரலாம். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், உதயநிதி உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜஸ்தானில் அதிர்ச்சி: கடத்தப்பட்ட 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
திங்கள் 29, ஜூன் 2026 11:51:00 AM (IST)

ஹைதராபாத் சாலைக்கு 'டொனால்டு டிரம்ப்' பெயர்: தெலுங்கானா அரசுக்கு அமெரிக்க அதிபர் நன்றி!
சனி 27, ஜூன் 2026 11:14:48 AM (IST)

ராமர் கோவில் காணிக்கை மோசடி குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
வெள்ளி 26, ஜூன் 2026 4:45:23 PM (IST)

இந்தியாவின் புதிய தங்கச் சுரங்கம்: ஆந்திராவில் 0.8 டன் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு!
வெள்ளி 26, ஜூன் 2026 11:24:32 AM (IST)

இந்தியாவில் ரூ.4.1 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ ஆலோசனை!
வியாழன் 25, ஜூன் 2026 5:43:27 PM (IST)

மதுவில் எலி மருந்து கொடுத்து 8 பேரைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ கொலைகாரன் - பகீர் தகவல்கள்!
வியாழன் 25, ஜூன் 2026 12:26:11 PM (IST)


