» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளின் ஊதுகுழல்: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடும் தாக்கு!

செவ்வாய் 28, ஜூலை 2026 10:54:59 AM (IST)

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்ததாவது: "ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளிடம் விற்கப்பட்டவர்; அவர் அந்நிய சக்திகளின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார். அவர்களை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக அந்நிய நாட்டின் அமைப்புகள் உள்ளன. காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவருக்கு அந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.

கடந்த 2004 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் ராகுல் காந்தி பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால், அவருடைய பயணங்கள் குறித்த எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. அவர் வெளிநாடுகளுக்குச் சென்று யாரைச் சந்திக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது. அவருடைய வெளிநாட்டுப் பயணங்களில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை."

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்த நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் கூறினார்.

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், அவரது வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் குறித்தும் பாஜக தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory