» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

KeralaCmvijay.jpg

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசே தீர்மானிக்கட்டும் என கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறியுள்ளார்.

சென்னை அருகே கோவளத்தில் இன்று (ஆக. 20) நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான 31-ஆவது தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முக்கியப் பிரச்சினைகள், மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவுகள், தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்ற கேரள முதல்வர் வி.டி. சதீசன், கேரளத்தின் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், முல்லைப் பெரியாற்றில் கட்டப்படும் புதிய அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்ப் பகிர்வு முழுவதுமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: "முல்லைப் பெரியாற்றில் கட்டப்படும் புதிய அணையின் வடிவம், அமைவிடம் மற்றும் கட்டுமானப் பணிகளைத் தமிழக அரசே மேற்கொள்ளட்டும். அதற்கான முழுமையான செலவைக் கேரள அரசு ஏற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையானது பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், இதனால் முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்ட வேண்டுமெனவும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பான முறையில் செயல்பட்டு வருவதாகத் தமிழக அரசு உறுதியளித்து வருகிறது. மேலும், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்வதற்குத் தமிழக அரசு குத்தகை மூலம் 999 ஆண்டுகளுக்கு உரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory