» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

BankStrikeFile.jpg

வாரத்தில் 5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

9 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இணைந்த ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் பணி கோரிக்கை: வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை கடந்த 2024 மார்ச் 8-இல் நடந்த இருதரப்பு கூட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஏற்றுக்கொண்டது. அதற்குப் பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பணிநேரத்தை 40 நிமிடங்கள் அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் தாமதம்: இதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் ஊக்குத்தொகை எதிர்ப்பு: 4-ஆம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்குத்தொகை திட்டத்தையும் சங்கங்கள் எதிர்த்துள்ளன.

தொடர் போராட்டங்கள் அறிவிப்பு:

செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்திற்குப் பிறகும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது:

1. செப்டம்பர் 28 முதல்: 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம்.

2. அக்டோபர் 26 முதல்: காலவரையற்ற வேலைநிறுத்தம்.

தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பு:

செப்டம்பர் 11 (வியாழன்) அன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், அதனைத் தொடர்ந்து:

செப்டம்பர் 12 (சனி): 2-வது சனிக்கிழமை விடுமுறை

செப்டம்பர் 13 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை

செப்டம்பர் 14 (திங்கள்): விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை

எனவே, செப்டம்பர் 11 முதல் 14 வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory