» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் மோதல்: 42 பேர் பலி; 170 பேர் படுகாயம்!
செவ்வாய் 30, ஜூலை 2024 11:11:33 AM (IST)

பாகிஸ்தானில் பழங்குடியினர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 170 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் உப்பர் குர்ரம் நகரில் இரு பழங்குடியின குழுக்கள் உள்ளனர். நில உரிமை தொடர்பாக இந்த குழுவினர் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர்.அதன்படி கடந்த வாரம் புசேரா கிராமத்தில் உள்ள பழங்குடி குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் இந்த கலவரம் காட்டுத்தீ போல அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியது. இதனையடுத்து பதுங்கு குழிகள் அமைத்துக்கொண்டு இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கினர். 5 நாட்களுக்கு பிறகு இந்த மோதல் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் மீண்டும் கலவரம் தொடங்கியது. தீவிரம் அடைந்த இ்ந்த கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசியும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனால் இருதரப்பிலும் இதுவரை 42 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 170 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
மேலும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் கலவரம் பரவுவதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது. எனவே கலவரத்தை ஒடுக்க அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம் பேச்சுவார்த்தை மூலம் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)
