» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமைதி ஒப்பந்தத்தின் அந்த 10 சதவீதம் உக்ரைன் தலைவிதியை தீர்மானிக்கும்: ஜெலன்ஸ்கி
வியாழன் 1, ஜனவரி 2026 11:44:49 AM (IST)
அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயார்.. மீதமுள்ள 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது.
அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும். போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் விரும்பினாலும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்தவொரு தீர்வும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.
உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடிய அல்லது ரஷியாவைத் தூண்டிவிடக்கூடிய சலுகைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படக்கூடாது. நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜிமெயில் முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
புதன் 31, டிசம்பர் 2025 3:29:53 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:51:19 AM (IST)

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: டிரம்ப்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:39:55 PM (IST)

தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: கூட்டு அறிக்கை வெளியீடு!
சனி 27, டிசம்பர் 2025 4:02:41 PM (IST)

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி!!
சனி 27, டிசம்பர் 2025 12:31:05 PM (IST)

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)


