» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:52:57 AM (IST)

ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது. பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி போன்றவை ஏற்படுகின்றன.அந்தவகையில் ஜப்பானின் கியூசு தீவில் நேற்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பல கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிதுநேரத்தில் அங்கு சக்திவாய்ந்த மற்றொரு நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அப்போது பல வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பயந்துபோன மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா மற்றும் எகிம் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. எனவே வழக்கத்தை விட அங்கு கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.இதன் காரணமாக கடற்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். இதற்கிடையே மீட்பு படையினர் எந்நேரத்திலும் தயாராக இருக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!
சனி 26, ஏப்ரல் 2025 4:37:09 PM (IST)

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்
சனி 26, ஏப்ரல் 2025 12:21:09 PM (IST)

இந்திய-பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐநா வேண்டுகோள்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:33:40 PM (IST)

சிந்து நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை: பாகிஸ்தான் எச்சரிக்கை!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:02:13 PM (IST)

கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை : பாகிஸ்தான் அரசு உத்தரவு
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:19:32 PM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்: நெதன்யாகு
புதன் 23, ஏப்ரல் 2025 3:50:45 PM (IST)
