» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரேசிலில் பயங்கரம்: நடுவானில் இருந்து கீழே விழுந்த விமானம் - 62 பேர் உயிரிழப்பு!

சனி 10, ஆகஸ்ட் 2024 4:34:07 PM (IST)



பிரேஸில் நாட்டில் விமானம் குடியிருப்புப் பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 62பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் இருந்து வியோபாஸ் என்ற 2283 விமானம் வின்ஹெடோ நகர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கிழே விழுந்து நொறுங்கியது.  இந்த விமான விபத்தில் பயணிகள் 62 பேரும் பலியாகியுள்ளனர். விமான விபத்தில் 62 பேர் பலியான சம்பவத்திற்கு பிரேசில் அதிபர் லூலா டாசில்வா கடும் அதிர்ச்சி தெரிவித்து இருப்பதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே விமானம் பறந்து கொண்டிருந்த போதே கட்டுப்பாட்டை இழந்து வானத்தில் சுழன்றபடி கீழே விழும் பரபரப்பு சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து தீபிடித்து எரியும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்பு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல, காக்பிட் அறையில் விமானிகள் கடைசி நிமிடத்தில் பேசிக்கொண்டதை பதிவு செய்யும் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் விமானத்தின் தரவு பதிவு கருவி ஆகியவையும் கிடைத்துள்ளது. இந்த கருவிகளை பிரேசிலியாவில் உள்ள ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகே விமானம் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory