» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவு

சனி 15, பிப்ரவரி 2025 12:55:06 PM (IST)

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசுசாரா துறை ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், இந்த துறையின் தலைவராக உள்ளார். அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதே டிரம்பின் நோக்கமாக இருக்கிறது.

சமீபத்தில் தாமாக முன் வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாதம் ஊதியம் வழங்கப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த உத்தரவுக்கு அமெரிக்கா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் எரிசக்தி துறையில் 1,200 முதல் 2 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

அதேபோல், அமெரிக்கா அணு ஆயுதக் குழுவை நிர்வகிக்கும் மற்றும் உலகம் முழுவதும் கதிரியக்கப் பொருட்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திலிருந்து 325 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அத்தியாவசியமான தேவைக்கான ஊழியர்களை மட்டும் பணியில் வைத்து இருக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து அரசு ஊழியர்களுக்கு நீங்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory