» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்; 44 பேர் பலி
ஞாயிறு 23, மார்ச் 2025 9:53:19 AM (IST)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள ஒரு மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 44 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் பிரான்சிடம் இருந்து 1960-ல் சுதந்திரம் பெற்றது. எனினும் தனது ஆதரவு பெற்ற அதிபர் முகமது பாசும் மூலம் பிரான்ஸ் தொடர்ந்து மறைமுக ஆட்சி செய்து வந்தது. இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு அதிபர் முகமது பாசுமை பதவியில் இருந்து அகற்றி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து அண்டை நாடுகளான புர்கினோ பாசோ, மாலியிலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அந்த நாடுகளின் எல்லையில் ஐ.எஸ்., அல்-கொய்தா பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். எனவே தங்களது பாதுகாப்பு கருதி சகேல் நாடுகள் கூட்டணி என்ற அமைப்பை அவை உருவாக்கின. அவை ரஷியாவின் உதவியுடன் எல்லை பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் மாலி, புர்கினோ பாசோ எல்லை பகுதியான கோகோரூ அருகே உள்ள மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து அங்குள்ள சந்தையில் உள்ள கடைகளையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
இதில் 44 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 13 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அங்கு 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி : அமெரிக்க அதிபர் உத்தரவு
திங்கள் 5, மே 2025 11:48:08 AM (IST)

அணு ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியாவை தாக்குவோம்: பாகிஸ்தான் மிரட்டல்
ஞாயிறு 4, மே 2025 9:16:36 PM (IST)

போப் போல் ஆடை அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் : சமூக வலைதளத்தில் வைரல்!!
சனி 3, மே 2025 5:31:07 PM (IST)

பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: வெளியுறவுத்துறை அதிகாரி அறிவிப்பு
சனி 3, மே 2025 10:42:58 AM (IST)

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை: டிரம்ப் எச்சரிக்கை
வெள்ளி 2, மே 2025 12:36:51 PM (IST)
