» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து: 98 பேர் பலி
புதன் 9, ஏப்ரல் 2025 12:21:44 PM (IST)

டொமினிகன் குடியரசின் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 98 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
500 முதல் 1,000 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இசைநிகழ்ச்சி இன்று அதிகாலை வரை நீடித்துள்ளது. அப்போது, இசைநிகழ்ச்சி நடைபெற்ற கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 98 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி : அமெரிக்க அதிபர் உத்தரவு
திங்கள் 5, மே 2025 11:48:08 AM (IST)

அணு ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியாவை தாக்குவோம்: பாகிஸ்தான் மிரட்டல்
ஞாயிறு 4, மே 2025 9:16:36 PM (IST)

போப் போல் ஆடை அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் : சமூக வலைதளத்தில் வைரல்!!
சனி 3, மே 2025 5:31:07 PM (IST)

பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: வெளியுறவுத்துறை அதிகாரி அறிவிப்பு
சனி 3, மே 2025 10:42:58 AM (IST)

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை: டிரம்ப் எச்சரிக்கை
வெள்ளி 2, மே 2025 12:36:51 PM (IST)

இதுApr 10, 2025 - 09:16:41 AM | Posted IP 172.7*****