» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஷேக் ஹசினாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடிய வங்கதேச இடைக்கால அரசு

திங்கள் 21, ஏப்ரல் 2025 8:41:11 AM (IST)

ஷேக் ஹசினாவை கைது செய்ய வங்காளதேசத்தின் இடைக்கால அரசு சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துஉள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது ஊழல், இனப்படுகொலை உள்பட பல்வேறு வழக்கு தொடரப்பட்டது. 

இதில் அவருக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்துஉள்ளது. இதையடுத்து ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே வங்காளதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக ஷேக் ஹசீனா மீதும் அவரது ஆதரவாளர்கள் 72 போ் மீதும் டாக்கா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கோரி வங்காளதேச காவல்துறை சர்வதேச போலீசான இன்டர் போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் 11 பேர் மீது நோட்டீஸ் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக் கயை வங்காளதேச காவல் துறையின் தேசிய மத்திய பணியகம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ஷேக் ஹசீனா மீதான விசாரணைகளின் போது அல்லது நடந்து கொண்டிருக்கும் வழக்கு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பாக இந்த விண்ணப்பங்கள் இன்டர்போலிடம் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் தப்பியோடியவர்களின் இருப்பிடங்களை அடையாளம் காண்பதில் இன்டர்போல் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory