» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழகத்திலிருந்து கடத்திய ரூ.9.6 கோடி கஞ்சா பறிமுதல்; 4பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை!

புதன் 30, ஏப்ரல் 2025 11:55:40 AM (IST)

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரூ.9.60 கோடி மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடத்தல் அதிகரித்து வருகிறது. கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து அதிகப்படியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இன்று (ஏப்ரல் 30) அதிகாலை தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கை பருத்தித்துறை கடற்கரைக்கு கஞ்சா கடத்தி வர இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இலங்கை காங்கேசன்துறை, பருத்திதுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கடற்பரப்பில் வழக்கத்தை விட இலங்கை கடற்படையினர் தீவிர சோதனை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது இந்திய கடற்பரப்பிலிருந்து இன்று அதிகாலை இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித் துறை கடற்கரையை நோக்கி வந்த 2 பைபர் படகை கடற்படையினர் பிடித்தனர்.

சோதனை செய்த போது அதில் சுமார் 320 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களுடன் படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 4 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் பருத்தித் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முதல் கட்ட விசாரணையில் இலங்கையர்கள் 4 பேரும் இரண்டு பைபர் படகுகளில் தமிழக கடற்கரைக்கு வந்து இந்த கஞ்சா பொட்டலங்களை பெற்று கொண்டு வந்தது தெரிய வந்தது.கஞ்சா ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய் என மொத்தமாக ரூ.9.60 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பின்னர் பைபர் படகு, கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேரும் பருத்தித்துறை போலீஸிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory