» செய்திகள் - விளையாட்டு » உலகம்
விமான படை தளம் மீது ஈரான் தாக்குதல்: தூதரை அழைத்து கத்தார் கடும் கண்டனம்!
புதன் 25, ஜூன் 2025 12:14:19 PM (IST)
கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியதாக ஈரான் தாக்குதலுக்கு அந்நாட்டின் தூதரை அழைத்து கத்தார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஆனால், அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரித்தது. தொடர்ந்து பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கியது. இதில் கத்தார் நாடும் தாக்கப்பட்டது.
இதேபோன்று, ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வடக்கே அல்-தஜி என்ற ராணுவ தளம் அமைந்துள்ளது. இதில் ராணுவ கண்காணிப்பு பணிக்கான ரேடார் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஈரான் செயலுக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கத்தார் நாட்டின் வெளிவிவகார அமைச்சகம், கத்தாருக்கான ஈரான் தூதர் அலி சலேஹாபதியை அழைத்து, கத்தார் நாட்டில் அல்-உதீத் விமான படை தளத்தின் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி கத்தார் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஈரானை கடுமையாக சாடியுள்ளது. கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியதுடன், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. ஆவண விதிகளையும் இந்த தாக்குதல் மீறியுள்ளது. சர்வதேச விதிகளின்படி, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் உரிமை கத்தாருக்கு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
ஈரானிய தூதருடன், கத்தாரின் வெளிவிவகார துறை அமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முரைகி நடத்திய சந்திப்பின்போது, கத்தார் மற்றும் ஈரான் நாடுகள் இடையேயான நெருங்கிய உறவுகள் மற்றும் நல்ல நட்பு என்ற கொள்கையை முற்றிலும் மீறும் வகையில் உள்ளது. பதற்றம் மேலும் அதிகரிக்காமல் அதனை தடுக்கும் வகையில், உடனடியாக பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய தேவை ஈரானுக்கு உள்ளது என்று அப்போது அல் முரைகி வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க - இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:42:00 PM (IST)

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)

போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் பேச்சு!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:52:40 PM (IST)

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)
