» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)

தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே 31 அன்று ஹான் நதிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் உள்ளே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார். தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வோன்-உம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மனைவியுடன் விவாகரத்து வழக்கின் முடிவில் ஏற்பட்ட விரக்தியால் வோன் இந்த செயலைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க - இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:42:00 PM (IST)

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)

போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் பேச்சு!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:52:40 PM (IST)

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)
