» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாக பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது..
இது குறித்து பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் குறித்து மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு தீவிர கவலைகளை அளிப்பதாகவும், அவை உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தகம் குறையவும், விநியோகச் சங்கிலிகள் சீர்குலையவும், நிச்சயமற்ற தன்மை ஏற்படவும் இவை வழிவகுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2035 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5%-ஐ ராணுவ செலவினங்களுக்கு கூடுதலாகச் செலவிடுவது என்ற நேட்டோ நாடுகளின் முடிவை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கடுமையாக விமர்சித்தார். சமாதானத்துக்காக செலவிடுவதைவிட போருக்காக செலவிடுவது எப்போதுமே எளிதானது என்று அவர் விமர்சித்தார்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், அந்த தீர்மானத்தில் இஸ்ரேல் பெயரோ, அமெரிக்காவின் பெயரோ இடம்பெறவில்லை. காசாவில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தீவிர கவலையை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளையும் அங்கீகரிப்பதே பிரச்சினைக்குத் தீர்வு என்றும் பிரிக்ஸ் யோசனை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பான தீர்மானத்தில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

