» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடை: இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

புதன் 16, ஜூலை 2025 10:45:54 AM (IST)



ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், சீனா, இந்தியா மற்றும் பிரேசில் கடும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரித்து உள்ளார்.

இது குறித்து, நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியதாவது: நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியும்.

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும். தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தால் 100% பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள், புடினை அழைத்து தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எனவே தயவுசெய்து புடினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சு வார்த்தைகளில், தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துங்கள். இல்லையெனில் இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். ரஷ்யாவின் எண்ணெய் வாங்குபவர்களில் இந்தியா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory