» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 10:25:35 AM (IST)

அமெரிக்காவில் கோயிலுக்கு செல்லும் வழியில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கில் வசிக்கும் இந்தியர்களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் கடந்த வாரம் மேற்கு வர்ஜினியாவின் மார்ஷல் மாவட்டத்தில் உள்ள பிரபுபடாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு காரில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி முதல் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் காவல் துறையில் புகார் செய்துள்ளனர். ஓஹியோ மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியதில், பிக் வீலிங் கிரீக் சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி இருந்தது ஆகஸ்ட் 2-ம் தேதி தெரியவந்தது. அங்கிருந்து அந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த தகவலை மார்ஷல் மாவட்ட அதிகாரி மைக் டவுகெர்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க - இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:42:00 PM (IST)

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)

போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் பேச்சு!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:52:40 PM (IST)

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)
