» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாஷிங்டனை தொடர்ந்து சிகாகோவிலும் ராணுவத்தை களமிறக்க அதிபர் டிரம்ப் முடிவு

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:53:32 PM (IST)

வாஷிங்டனை தொடர்ந்து, சிகாகோவிலும் பாதுகாப்புக்கு ராணுவத்தை களமிறக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். 

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், சிறப்பு மாவட்டமாக உள்ளது. இதன் பாதுகாப்பு மேயரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீசாரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் வாஷிங்டனின் பாதுகாப்பை டிரம்ப் தன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். நகரில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காரணம் கூறி ராணுவத்தினரை குவித்தார்.

இதே போல் கலிபோர்னி யாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடந்த ஜூனில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் நட வடிக்கையில் குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு எதிராக கூட்டத்தினர் தாக்குதல் நடத்தினர் . இதையடுத்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு 4,000 ராணுவத்தினர், 700 கடற்படையினரை அனுப்பினார்.

தற்போது அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரம், 'குற்றங்களால் குழப்பத்தில் உள்ளது, அதை சரி செய்வோம்' என அதிபர் டிரம்ப் கூறினார். இதனால் ராணுவ தலைமையகமான பென்ட கன் சிகாகோவுக்கு ராணுவத்தை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory