» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)



அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்கள் அதிகமாக நம்பியிருக்கும் ஹெச்1-பி விசாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை ஹெச்1-பி விசாவில் உள்ள விதிமீறல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டு முதற்கட்டமாக இன்று 175 விதிமீறல்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்கா செல்ல ஹெச்1-பி விசாவுக்கு விண்ணப்பிப்போரில் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு விசா வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, நரம்பியல் நோய்கள், மனநலம் சார்ந்த கோளாறுகள் உள்ளவர்களின் விசாக்களை நிராகரிக்குமாறு அமெரிக்காவில் உள்ள தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உடல்நலக் குறைவு உள்ளவர்களால் அமெரிக்காவுக்கு நிதிச்சுமை ஏற்படலாம், இந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க அதிக பணம் தேவைப்படும் என்பதால் விண்ணப்பதாரரின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு விசாவை ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ​​ஆஸ்துமா, தூக்கத்தில் மூச்சுத்திணறல், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் தூதரக அதிகாரிகள் கவனத்தில்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரரின் குடும்பத்தினரின் உடல்நலத்தையும் சோதிக்க வேண்டும், குடும்பத்தினருக்கு பிரச்னை இருந்தால் அவர்களது பராமரிப்புக்கான செலவை செய்ய முடியுமா? விண்ணப்பதாரர் வேலையைத் தொடர முடியுமா? ஆகியவற்றை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory