» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், குறிப்பாக சமீப நாட்களில் இந்துக்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து ஐ.நா.வின் நிலைப்பாடு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பதிலளித்தார். அதில், வங்கதேசத்தின் நிலைமை குறித்து ஐ.நா. மிகவும் கவலைப்படுகிறது. மற்ற எந்த நாட்டையும் போலவே, பெரும்பான்மை சமூகத்தைச் சாராத மக்களும் பாதுகாப்பாக உணர வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அத்தியாவசியமானது. ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசாங்கம் எடுக்கும் என்று ஐ.நா. எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:11:03 AM (IST)

டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்
திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)

வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து வன்முறை: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்!
சனி 20, டிசம்பர் 2025 10:46:38 AM (IST)

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

