» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்

செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:11:03 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா, தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். 

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன். நீங்கள் 1 கோடி பேரை காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உக்ரைன் - ரஷியா போரை மட்டுமே இதுவரை என்னால் நிறுத்த முடியவில்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory