» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைன் நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:46:00 PM (IST)



உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் சுதந்திர தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனின் சுதந்திர தினத்தன்று வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமைதியை உருவாக்க முயற்சிக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். 

தற்போது முழு உலகமும் இந்த கொடூரமான போரை கண்ணியத்துடனும் நீடித்த அமைதியுடனும் முடிவுக்கு கொண்டுவரும் பணியில் இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம். பேச்சுவார்த்தையை வலுப்படும் ஒவ்வொரு முடிவும் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் மற்றூம் அதற்உ அப்பாலும் சிறந்த பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory