» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷியாவை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாருங்கள், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை" என்று கூறினார்.

டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த முன்னாள் ரஷிய அதிபரும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், "உக்ரைனுக்கு டோமாஹாக்ஸ் வழங்கப்பட்டால், அது அனைவருக்கும், குறிப்பாக டிரம்பிற்கு ஒரு பிரச்சனையாக இருக்கும். இது ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது போன்ற மற்றொரு வெற்று அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணை மூலம் உக்ரைன் ரஷிய தலைநகர் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும். இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வேண்டி அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ள நிலையில் டிரம்ப் உடைய கருத்து வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory