» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா

வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவுறுத்தலையடுத்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளதாக வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். 

ரஷியா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்த போரை ஊக்குவிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில் அந்த நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.

இந்நிலையில், டிரம்ப்பின் அறிவுறுத்தலையடுத்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கரோலின் கூறுகையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சீனா குறைத்துக்கொண்டதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, டிரம்பின் வேண்டுகோளை ஏற்று ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory