» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)
சட்ட விதிகளுக்கு இணங்க மறுத்ததாக எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஆணையம் ரூ.1,259 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்ட விதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டவிதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது.அப்போதிருந்தே உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்கின், எக்ஸ் வலைத்தளம் அந்த புதிய விதிகளுக்கு இணங்கவில்லை. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் விதிகளுக்கு இணங்க மறுத்த எக்ஸ் வலைத்தளம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,259 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் ஐரோப்பிய ஆணையம் அறிவித்து உள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு குறைபாடான ஏமாற்றும் வடிவமைப்புகள் இருப்பதாகவும், ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளை தர தயார்: புதின்
வியாழன் 22, ஜனவரி 2026 11:34:49 AM (IST)

ஜப்பான் முன்னாள் பிரதமரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 21, ஜனவரி 2026 4:05:36 PM (IST)

நைஜீரியாவில் தேவாலயங்களுக்குள் புகுந்து 170 பேர் கடத்தல் : ஆயுத கும்பல் அட்டகாசம்
புதன் 21, ஜனவரி 2026 8:32:20 AM (IST)

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பதில் 100 சதவீதம் உறுதி: டிரம்ப்
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:45:27 PM (IST)

காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!
திங்கள் 19, ஜனவரி 2026 11:39:03 AM (IST)

உகாண்டா அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி
ஞாயிறு 18, ஜனவரி 2026 12:16:51 PM (IST)

