» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க வரி : டிரம்ப் எச்சரிக்கை!

சனி 17, ஜனவரி 2026 10:19:13 AM (IST)

கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/TrumpUSAPresident_1768625660.jpgடென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, தன்னாட்சி பெற்ற பகுதியாக செயல்பட்டு வரும் கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வாஷிங்டனில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம் என கூறினார். மேலும், கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்காத, எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory